Showing posts with label Joke. Show all posts
Showing posts with label Joke. Show all posts

ஒரு ஊர்ல... ...

ஒரு ஊர்ல ஒரு நெறைய பேரு இருந்தாங்களாம்.
( ஒருத்தன்னு ஆரம்பிச்சா ஒருத்தன் தானான்னு கேப்பீங்க)..
அந்த நெறைய பேருல ஒருத்தர் செத்து போயிட்டாராம்..
அப்போ எல்லாருக்கும் ஒரு டவுட்டு ..
செத்தவன எரிக்கிறதா? புதைக்கிறதா ??
எரிச்சா பிரச்சனை இல்லை….. புதைச்சா ரெண்டு பிரச்சனை…
புதைச்ச இடத்துல புல்லு முளைக்குமா முளைக்காதா
முளைக்கலன்னா பிரச்சனை இல்லை…
முளைச்சா ரெண்டு பிரச்சனை
மாடு திங்குமா திங்காதா..
திங்கலன்னா பிரச்சனை இல்லை… தின்னா ரெண்டு பிரச்சனை…
பால் குடுக்குமா குடுக்காதா?
குடுக்கலன்னா பிரச்சனை இல்லை, குடுத்தா ரெண்டு பிரச்சனை …
குடிக்க்கலாமா வேண்டாமா ?
குடிக்கலன்னா பிரச்சனை இல்லை…
குடிச்சா ரெண்டு பிரச்சனை…
குடிச்சவன் பொழைப்பானா மாட்டானா?
பொழச்சுட்டா பிரச்சனை இல்லை…
பொழைக்கலன்னா ரெண்டு பிரச்சனை…
அவன எரிக்கிறதா புதைக்கிறதா?
எரிச்சிட்டா பிரச்சனை இல்லை…
புதைச்சா???
இப்போ நீங்க சொல்லுங்க… நான் கதைய தொடரவா வேண்டாமா?

கையில சூடு!

Photoகாதலி: 
நான் காதலிக்கறது எங்க அப்பாவுக்கு தெரிஞ்சா அவ்ளோதான் கையில சூடு போட்டுடுவார்..

காதலன்:
அடச்சே! இப்படியெல்லாம பண்ணுவாங்க!?

காதலி:
ஆமா, இங்க பாருங்க. கையில ஏற்கனவே அஞ்சாறு சூடு போட்டுருக்காரு.

காதலன்: ???

தேர்தல் சிரிப்பு!

தலைவர்:
என்னப்பா மேடையில ஓடா வந்து விழுகுது?

தொண்டர்:
ஓட்டை அள்ளி வீசுங்க என்பதை மக்கள் தப்பா புரிஞ்சுகிட்டாங்க..

வேற எந்த நாய்க்கும் சாப்பாடு போடலை

கணவன் :
தெருவுல ஒரு கருப்பு நாய் செத்துக் கிடக்கே..
நீ எதாவது அதுக்கு சாப்பாடு போட்டியா..?

மனைவி :
நான் உங்களுக்கு மட்டும் தாங்க சாப்பாடு போட்டேன்.
வேற எந்த நாய்க்கும் சாப்பாடு போடலை..

அழகே கொல்லுதே!

மதுவருந்திவிட்டு ஓட்டுபவன் கூட
வீடு போய் சேர்கிறான்...

ஆனால்..
எதிரே உனைக் கண்டவனெல்லாம்

புளியமரத்தில் மோதி சாகிறான்...
ஏன் விஜயகாந்த் கிளியையும்,ஜோசியரையும் போட்டு அடிச்சுட்டு இருக்காரு?

18 சீட் எதிர்பார்த்தாராம், அந்த கிளி ஒரே ஒரு சீட்டை எடுத்து நீட்டுச்சாம்..

இன்னொரு பொண்ணு நல்லா இருந்தா பிடிக்காதே!

அஜீத் தான் நல்லா இருக்காரு,விஜய் தான் நல்லா இருக்காருன்னு பசங்க அடிச்சுக்குறானுங்களே,அதே மாதிரி நயன்தாரா தான் நல்லா இருக்கு,நஸ்ரியா தான் நல்லா இருக்குன்னு பொண்ணுங்க என்னைக்காவது சண்டை போட்டு பார்த்திருக்கிங்களா?

மாட்டாங்க...

பொண்ணுங்களுக்கு தான் இன்னொரு பொண்ணு நல்லா இருந்தா பிடிக்காதே

நீங்கள் காதலிக்க முடிவெடுத்துவிட்டால்..

நீங்கள் காதலிக்க முடிவெடுத்துவிட்டால் முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட வேண்டும்,

மன்மோகன் சிங் போல பேசாமல் இருக்க வேண்டும்,சண்டைகளை குறைக்கும்.

கலைஞர் போல அடிக்கடி பொய்கள் சொல்ல வேண்டும்,அது உறவை வளர்க்கும்.

ஜெயலலிதா போல விலையில்லா பரிசுபொருட்கள் கொடுக்க வேண்டும்,அன்னியோனியம் அதிகரிக்கும்.

வைகோ போல நீண்ட தூரம் நடக்க பழக வேண்டும்,பின்னாளில் ஓட பயன்படும்,

ராமதாஸ் போல அவளை சுற்றும் பிற ஆண்களின் நாடக காதலை எதிர்க்க வேண்டும்.போட்டியை குறைக்கும்,

இப்படி நீங்கள் செய்தால் காதலில் மோடி போல திட்டமிட்டு ஜெயிக்கலாம்,

ஒருவேளை அவள் சோனியா போல உங்களை ஏமாற்றிவிட்டால் தா.பாண்டியன் போல புலம்ப கூடாது,

கேப்டன் போல ரெண்டு ரௌண்டு விட்டு டி.ஆர் போல கட்சியை கலைத்து எங்காவது வீட்டோடு மாப்பிள்ளை ஆகிட வேண்டும்

இன்றைய கண்டுபிடிப்பு..

புதுசா கல்யாணம் ஆனா பொண்ணு வாந்தி எடுத்தா
தப்பில்ல, அதுவே பையன் வாந்தி எடுத்தா !!

பொண்ணு சமையல் பண்ண ஆரம்பிச்சிட்டான்னு
அர்த்தம் !!

புத்தாண்டு கடி

கடை முதலாளி : ஏண்டா, அந்த ஆளை திருப்பி அனுப்பிட்ட..

பையன் : அந்த ஆளு 2012 "காலண்டர்" கேக்குறாரு. நம்மகிட்ட 1000 "காலண்டர்" தான இருக்கு.

வரிசையில் போய் நில்லுங்கள்!

ஒருவர் டீக்கடையில் உட்கார்ந்து இருந்தபோது,

இரண்டு பிணங்கள் சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்படுவதைப் பார்த்தார். அவற்றுக்குப் பின்னே

நாயுடன் ஒருவர் நடந்து செல்ல, அவருக்குப் பின்னே சுமார் 500 பேர் ஒருவர் பின் ஒருவராக செல்லக் கண்டார்.
இது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

நாய் வைத்திருந்தவரை அணுகி,

"இது போன்ற பிண ஊர்வலத்தை எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த அளவுக்கு வரிசையாக யாரும் சென்றதில்லை? ஆமாம், யாருடைய ஊர்வலம் இது?"

"முதலில் செல்வது எனது மனைவி."

"என்ன ஆயிற்று அவருக்கு?"

"எனது நாய் அவரைக் கடித்து கொன்று விட்டது"

"இரண்டாவது பிணம்?"

"அது என் மாமியாருடையது. என் மனைவியைக் காப்பாற்றச் சென்ற அவரையும் கொன்றுவிட்டது"

உடனே முதலாமாவர் ஆர்வத்துடன் கேட்டார்,
"இந்த நாய் எனக்கு வாடகைக்குக் கிடைக்குமா?"

அதற்கு அவர் சொன்னார், "வரிசையில் போய் நில்லுங்கள்.."

Think different!



If u marry 1 girl, she will fight with u.!
.
.
But if u marry 2 girls, they wil fight for u.!
Think different!

Similarity between
FACEBOOK & JAIL.
.
.
.
.
.
.
.
..
In both cases You sit, waste time and write on Walls.

பல் துலக்குங்க!


புன்னகை என்பது எதிரியை கூட நண்பனாக்கும்.

ஆனால்..
பல் துலக்காமல் சிரித்தால்..
நண்பனை கூட எதிரியாக்கி விடும்.

மூக்கறுப்பு



பேருந்து நிறுத்தத்தில்..

வாலிபன்: நீங்க ரொம்ப நேரமா நிக்கறீங்க, உட்காருங்க..!

பெண்: இதுவே ஒரு கிழவியா இருந்தா இப்படி சொல்லுவீங்களா?

வாலிபன்: அப்போ நீங்க "கிழவி" இல்லையா?

?!



கப்பல் படை நேர்முகத் தேர்வில்..
அதிகாரி: கப்பல் படை தேர்வுக்கு வந்து இருக்கியே, உனக்கு நீச்சல் தெரியுமா?

நபர்: அப்படினா, விமானப் படைக்கு போனா, பறக்க தெரியனுமா?

தத்துவம்



ஓட்டப் பந்தயத்தில
கால் எவ்வளவு வேகமாக ஓடினாலும்..

பரிசு
'கை'க்குதான் கொடுப்பாங்க !

கல்லூரி கலகலப்பு!



மாணவன்: நீங்க நிறைய அழகு..
மாணவி: ரொம்ப நன்றி.
மாணவன்: உங்க தோழி உங்கள விட அழகு..
மாணவி: போடா எரும.

மாணவன்: அது உங்க ரெண்டு பேர விட அழகு..!
ஆசிரியர்: படிச்சு முடிச்சப்புறம் என்ன செய்யலாம்னு இருக்கே...?


மாணவன்: புத்தகத்த மூடிவிடலாம்னு இருக்கேன் ஐயா.