Showing posts with label சிரிப்பு. Show all posts
Showing posts with label சிரிப்பு. Show all posts

சிரிக்க மட்டுமே!

1.
கணவன் – “இப்படி நாம அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டு இருப்பதை அக்கம் பக்கத்திலே இருப்பவங்கள் பார்த்தா சிரிப்பாங்க... தெரியுமா?“
மனைவி – “அப்போ நாம போடுற சண்டை அவ்வளவு தமாஷாவா இருக்கு!“

2.
கணவன் – “இந்தத் தீபாவளிக்கு உனக்குப் பட்டுப் புடவை!“
மனைவி – “அப்படியா! எதை வச்சி சொல்லுறீங்க?“
கணவன் – “உன் வளையலை வைச்சுத்தான் சொல்லுறேன்.“

3.
மனைவி – “ஏங்க நம்ம பொண்ணுக்கு வயசாகிட்டே போகுதே. அவளுக்குச் சீக்கிரமா ஒரு மாப்பிள்ளை பார்க்கக் கூடாதா?“
கணவன் – “அழகா லட்சணமா ஒரு மாப்பிள்ளை கிடைக்கிறவரை காத்திருக்கட்டுண்டி.“
மனைவி – “எங்கப்பா அப்படியா காத்திருந்தார்?“

4.
கணவன் – “என்ன இது மிக்ஸி, கிரைண்டர், புடவைன்னு ஏகப்பட்ட சாமான்களோட வேன்ல வந்து இறங்கிறே....!“
மனைவி – “நீங்க தானே சொன்னீங்க.... பேங்கில இருக்கிற நம்ம ஜாயிண்ட் அக்கவுண்டை குளோஸ் பண்ணனும்ன்னு. அதைத் தான் செய்துட்டு வர்றேன்.“

5.
கணவன் – “ஏன் நான் உள்ளாற வந்தவுடனே கண்ணாடியை எடுத்துப் போட்டுக்கிடுற?“
மனைவி – “டாக்டர் தான், தலைவலி வந்தவுடனே கண்ணாடியைப் போட்டுக்கச் சொன்னார்.“

6.
மனைவி – “வேலைக்காரி உங்க மேலே விழறாப்லே உரசிட்டுப் போறா.... நீங்க பேசாம நிக்கிறீங்களே....“
கணவன் – “திரும்பி வரட்டும்.... பதிலுக்கு நானும் உரசிக் காட்டுறேன் பாரு.“

7.
மனைவி – “வர வர எனக்கு இந்த நகை, புடைவைகள் பேரில் இருக்கிற ஆசையே விட்டுப் போயிடுச்சிங்க“
கணவன் – “நிஜமாவா சொல்லற?“
மனைவி – “ஆமாம். எத்தனை நாளைக்குத்தான் இந்தப் பழைய நகைகளையும், பழைய புடவைகளையும் கட்டிண்டு இருக்கிறது.....“

8.
கணவன் – “இதோபாரு.... நம்ம வீட்டுல சினிமாச் செலவு ரொம்ப அதிகமாயிட்டு வருது. இதைப் பாதியா குறைக்கணும். சரியா?“
மனைவி – “சரிங்க.... இனிமே நான் மட்டும் சினிமாவுக்குப் போறேன்.“

9.
கணவன் – “வரதட்சணை வாங்கிட்டு கல்யாணம் செஞ்சது என் மனசை உறுத்திக்கிட்டே இருக்குது“
மனைவி – “அதுக்காக இப்போ என்ன பண்ணுவதாம்...?“
கணவன் – “வரதட்சணை வாங்காம இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு பிராயச்சித்தம் செய்யலாம்ன்னு இருக்கேன்“
மனைவி – கர்ர்ர்ர்ர்ர்.....

10.
மனைவி – “நீங்க எனக்கு ஒரு பட்டுப் புடவை வாங்கித்தர்ற மாதிரி நேற்று கனவு கண்டேன்“
கணவன் – “இன்னைக்கு அதைக் கட்டிக்கிறதா கனவு கண்டுவிடு. சரியாய்ப் போயிடும்...“

11.
கணவன் – “அரை மணி நேரமா நான் கரடியா கத்துறேன். நீ பதில் பேசலைன்னா என்ன அர்த்தம்?“
மனைவி – “எனக்கு கரடி பாஷை புரியலேன்னு அர்த்தம்.“

என்னம்மா நீங்க இப்டி பண்றீங்கலேமா?

காட்டில் ஒரு புலி சிகரெட் பிடித்து கொண்டு நின்றிருந்தது.
அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு எலி சொன்னது "சகோதரா, ஏன் இவ்வாறு சிகரெட் பிடித்து உன் வாழ்க்கையை வீணாக்குகிறாய்... என்னுடன் வா, இந்த காடு எவ்வளவு அழகானது என்று காட்டுகிறேன்..." அதை கேட்ட புலி சிகரெட்டை காலில் போட்டு நசுக்கி விட்டு எலியுடன் நடந்தது...

சிறிது தூரம் சென்ற பொழுது அதோ ஒரு யானை உதட்டின் அடியில் 'ஹான்ஸ் 'வைத்துக் கொண்டு இருக்கிறது. எலி யானையிடம் கேட்டது" சகோதரா நீ ஏன் இப்படி ஹான்ஸ், பான்பராக் எல்லாம் உபயோகித்து உன் வாழ்க்கையை சீரழிக்கிறாய்.. வா இந்த காடு எவ்வளவு சுந்தரமானது என்று காட்டுகிறேன்..." இதை கேட்ட யானை ஹான்ஸை எல்லாம் எடுத்து எறிந்து விட்டு எலியுடன் சென்றது....

அவ்வாறு மூன்று பேரும் நடந்து போகும் பொழுது அதோ சிங்க மகாராஜா சாராயம் குடித்துக் கொண்டு நிற்கிறது... இதை கண்ட எலி சிங்கத்திடம் கேட்டது... "மகாராஜாவே, ஏன் இப்படி உங்களை நீங்களே அழித்துக் கொள்கிறீர்கள்... இந்த காட்டின் அழகினை மகாராஜா இதுவரை கண்டதுண்டா... என்னுடன் வாருங்கள் அடியேன் நான் காட்டுகிறேன்..." இதை கேட்ட சிங்கம் எலியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டது. இதை கண்டு சப்த நாடியும் ஒடுங்கிப் போன புலியும் யானையும் சிங்கத்திடம் கேட்டன... "மகாராஜாவே, தாங்கள் ஏன் இந்த சமாதான தூதுவனை அடித்தீர்கள்...?" அப்பொழுது சிங்கம் சொன்னது...

"இந்த பரதேசி கஞ்சா அடிச்சிட்டு இதையே தான் சொல்லி நேத்து என்னைய இந்த காடு பூராவும் நடக்க வெச்சான்... தினமும் இவனுக்கு இதான் வேலையே..."

எவ்வளோ செலவு ஆனாலும் பரவாயில்லை!

பெண்: என்னோட ரெண்டு வயசு பையன் இன்னும் எப்பவும் விரல் சூப்புறான்.
மருத்துவர்: ஒன்னும் பிரச்சனை இல்லை.. சரி பண்ணிடலாம்.
பெண்: ரொம்போ கேவலமா இருக்கு.. எவ்வளோ செலவு ஆனாலும் பரவாயில்லை!
மருத்துவர் : ஒன்னும் செலவு இல்லை ...ரெண்டு வயசு பையனுக்கு ஒரு பெரிய பையனோட.... டவுசர மாட்டி வுட்டுடு....அவ்வளோதான்
பெண்: (குழப்பமாக ).. எதுக்கு..?
மருத்துவர்: அந்த டவுசர் அவனுக்கு பெருசா இருக்கும்.. அதை கீழே விழாமே மேலே இழுத்து விடுறதே அவன் வேலையா இருக்கும் விரல் சூப்ப நேரம் இருக்காது... 

ஒரு ஊர்ல... ...

ஒரு ஊர்ல ஒரு நெறைய பேரு இருந்தாங்களாம்.
( ஒருத்தன்னு ஆரம்பிச்சா ஒருத்தன் தானான்னு கேப்பீங்க)..
அந்த நெறைய பேருல ஒருத்தர் செத்து போயிட்டாராம்..
அப்போ எல்லாருக்கும் ஒரு டவுட்டு ..
செத்தவன எரிக்கிறதா? புதைக்கிறதா ??
எரிச்சா பிரச்சனை இல்லை….. புதைச்சா ரெண்டு பிரச்சனை…
புதைச்ச இடத்துல புல்லு முளைக்குமா முளைக்காதா
முளைக்கலன்னா பிரச்சனை இல்லை…
முளைச்சா ரெண்டு பிரச்சனை
மாடு திங்குமா திங்காதா..
திங்கலன்னா பிரச்சனை இல்லை… தின்னா ரெண்டு பிரச்சனை…
பால் குடுக்குமா குடுக்காதா?
குடுக்கலன்னா பிரச்சனை இல்லை, குடுத்தா ரெண்டு பிரச்சனை …
குடிக்க்கலாமா வேண்டாமா ?
குடிக்கலன்னா பிரச்சனை இல்லை…
குடிச்சா ரெண்டு பிரச்சனை…
குடிச்சவன் பொழைப்பானா மாட்டானா?
பொழச்சுட்டா பிரச்சனை இல்லை…
பொழைக்கலன்னா ரெண்டு பிரச்சனை…
அவன எரிக்கிறதா புதைக்கிறதா?
எரிச்சிட்டா பிரச்சனை இல்லை…
புதைச்சா???
இப்போ நீங்க சொல்லுங்க… நான் கதைய தொடரவா வேண்டாமா?

சரியான போட்டி!!

(சில ஆண்டுகளுக்குப் பிறகு தோழிகள் இருவர் சந்தித்து பேசுகின்றனர்)

தோழி1 : என்னடி! எப்படி இருக்கிற?
தோழி2: நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்கிற?
தோழி1: நானும் நல்லா இருக்கிறேன். உன் மாமியார் உன்னை நல்லா பார்த்துப்பாங்களாடி?
தோழி2: அதை ஏன் கேட்குறா, எதற்கெடுத்தாலும் எனக்கு போட்டியாவே ராங்கடி..
தோழி1: எத வச்சி அப்படி சொல்ற?
தோழி2: நான் ஒரு புடவை வாங்கினா உடனே அவங்களும் வாங்குறாங்க, நான் சமைச்சா அவங்களும் சமைக்கிறாங்க.
தோழி1: (சமையல்) நல்ல விஷயம்தானே!
தோழி2: நீ வேற டென்ஷன் ஆக்காதடி! நான் இப்போ "கர்ப்பமா இருக்கேன் இல்ல எனக்கு போட்டியா அவங்களும் கர்ப்பமா இருக்காங்கடி" என்னால வெளில தல காட்ட முடியல...
தோழி1: ?????????

கையில சூடு!

Photoகாதலி: 
நான் காதலிக்கறது எங்க அப்பாவுக்கு தெரிஞ்சா அவ்ளோதான் கையில சூடு போட்டுடுவார்..

காதலன்:
அடச்சே! இப்படியெல்லாம பண்ணுவாங்க!?

காதலி:
ஆமா, இங்க பாருங்க. கையில ஏற்கனவே அஞ்சாறு சூடு போட்டுருக்காரு.

காதலன்: ???

தேர்தல் சிரிப்பு!

தலைவர்:
என்னப்பா மேடையில ஓடா வந்து விழுகுது?

தொண்டர்:
ஓட்டை அள்ளி வீசுங்க என்பதை மக்கள் தப்பா புரிஞ்சுகிட்டாங்க..

வேற எந்த நாய்க்கும் சாப்பாடு போடலை

கணவன் :
தெருவுல ஒரு கருப்பு நாய் செத்துக் கிடக்கே..
நீ எதாவது அதுக்கு சாப்பாடு போட்டியா..?

மனைவி :
நான் உங்களுக்கு மட்டும் தாங்க சாப்பாடு போட்டேன்.
வேற எந்த நாய்க்கும் சாப்பாடு போடலை..

அழகே கொல்லுதே!

மதுவருந்திவிட்டு ஓட்டுபவன் கூட
வீடு போய் சேர்கிறான்...

ஆனால்..
எதிரே உனைக் கண்டவனெல்லாம்

புளியமரத்தில் மோதி சாகிறான்...

இன்னொரு பொண்ணு நல்லா இருந்தா பிடிக்காதே!

அஜீத் தான் நல்லா இருக்காரு,விஜய் தான் நல்லா இருக்காருன்னு பசங்க அடிச்சுக்குறானுங்களே,அதே மாதிரி நயன்தாரா தான் நல்லா இருக்கு,நஸ்ரியா தான் நல்லா இருக்குன்னு பொண்ணுங்க என்னைக்காவது சண்டை போட்டு பார்த்திருக்கிங்களா?

மாட்டாங்க...

பொண்ணுங்களுக்கு தான் இன்னொரு பொண்ணு நல்லா இருந்தா பிடிக்காதே

நீங்கள் காதலிக்க முடிவெடுத்துவிட்டால்..

நீங்கள் காதலிக்க முடிவெடுத்துவிட்டால் முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட வேண்டும்,

மன்மோகன் சிங் போல பேசாமல் இருக்க வேண்டும்,சண்டைகளை குறைக்கும்.

கலைஞர் போல அடிக்கடி பொய்கள் சொல்ல வேண்டும்,அது உறவை வளர்க்கும்.

ஜெயலலிதா போல விலையில்லா பரிசுபொருட்கள் கொடுக்க வேண்டும்,அன்னியோனியம் அதிகரிக்கும்.

வைகோ போல நீண்ட தூரம் நடக்க பழக வேண்டும்,பின்னாளில் ஓட பயன்படும்,

ராமதாஸ் போல அவளை சுற்றும் பிற ஆண்களின் நாடக காதலை எதிர்க்க வேண்டும்.போட்டியை குறைக்கும்,

இப்படி நீங்கள் செய்தால் காதலில் மோடி போல திட்டமிட்டு ஜெயிக்கலாம்,

ஒருவேளை அவள் சோனியா போல உங்களை ஏமாற்றிவிட்டால் தா.பாண்டியன் போல புலம்ப கூடாது,

கேப்டன் போல ரெண்டு ரௌண்டு விட்டு டி.ஆர் போல கட்சியை கலைத்து எங்காவது வீட்டோடு மாப்பிள்ளை ஆகிட வேண்டும்

இன்றைய கண்டுபிடிப்பு..

புதுசா கல்யாணம் ஆனா பொண்ணு வாந்தி எடுத்தா
தப்பில்ல, அதுவே பையன் வாந்தி எடுத்தா !!

பொண்ணு சமையல் பண்ண ஆரம்பிச்சிட்டான்னு
அர்த்தம் !!

வரிசையில் போய் நில்லுங்கள்!

ஒருவர் டீக்கடையில் உட்கார்ந்து இருந்தபோது,

இரண்டு பிணங்கள் சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்படுவதைப் பார்த்தார். அவற்றுக்குப் பின்னே

நாயுடன் ஒருவர் நடந்து செல்ல, அவருக்குப் பின்னே சுமார் 500 பேர் ஒருவர் பின் ஒருவராக செல்லக் கண்டார்.
இது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

நாய் வைத்திருந்தவரை அணுகி,

"இது போன்ற பிண ஊர்வலத்தை எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த அளவுக்கு வரிசையாக யாரும் சென்றதில்லை? ஆமாம், யாருடைய ஊர்வலம் இது?"

"முதலில் செல்வது எனது மனைவி."

"என்ன ஆயிற்று அவருக்கு?"

"எனது நாய் அவரைக் கடித்து கொன்று விட்டது"

"இரண்டாவது பிணம்?"

"அது என் மாமியாருடையது. என் மனைவியைக் காப்பாற்றச் சென்ற அவரையும் கொன்றுவிட்டது"

உடனே முதலாமாவர் ஆர்வத்துடன் கேட்டார்,
"இந்த நாய் எனக்கு வாடகைக்குக் கிடைக்குமா?"

அதற்கு அவர் சொன்னார், "வரிசையில் போய் நில்லுங்கள்.."

Similarity between
FACEBOOK & JAIL.
.
.
.
.
.
.
.
..
In both cases You sit, waste time and write on Walls.

நண்பன் !?


பையன்:
மச்சான்.. இன்னைக்கு உங்க வீட்டுல கோழி குழம்பாடா..

நண்பன்:
எப்படி மச்சான் கண்டுபிடுச்ச?

பையன்:
இல்ல, எங்க வீட்டுல ஒரு கோழிய காணோம்.

பல் துலக்குங்க!


புன்னகை என்பது எதிரியை கூட நண்பனாக்கும்.

ஆனால்..
பல் துலக்காமல் சிரித்தால்..
நண்பனை கூட எதிரியாக்கி விடும்.

நல்ல கேள்வி


நண்பன்1:
நான் அந்த பொண்ணுகிட்ட என் காதலை சொல்ல
ரெண்டு வருஷம் ஆச்சு..

நண்பன்2:
ஏன், அந்த பொண்ணு ரெண்டு வருஷமா
வேற ஒருத்தன காதலிச்சிக்கிட்டிருந்தாளா?

மூக்கறுப்பு



பேருந்து நிறுத்தத்தில்..

வாலிபன்: நீங்க ரொம்ப நேரமா நிக்கறீங்க, உட்காருங்க..!

பெண்: இதுவே ஒரு கிழவியா இருந்தா இப்படி சொல்லுவீங்களா?

வாலிபன்: அப்போ நீங்க "கிழவி" இல்லையா?

?!



கப்பல் படை நேர்முகத் தேர்வில்..
அதிகாரி: கப்பல் படை தேர்வுக்கு வந்து இருக்கியே, உனக்கு நீச்சல் தெரியுமா?

நபர்: அப்படினா, விமானப் படைக்கு போனா, பறக்க தெரியனுமா?