நீங்கள் காதலிக்க முடிவெடுத்துவிட்டால்..

நீங்கள் காதலிக்க முடிவெடுத்துவிட்டால் முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட வேண்டும்,

மன்மோகன் சிங் போல பேசாமல் இருக்க வேண்டும்,சண்டைகளை குறைக்கும்.

கலைஞர் போல அடிக்கடி பொய்கள் சொல்ல வேண்டும்,அது உறவை வளர்க்கும்.

ஜெயலலிதா போல விலையில்லா பரிசுபொருட்கள் கொடுக்க வேண்டும்,அன்னியோனியம் அதிகரிக்கும்.

வைகோ போல நீண்ட தூரம் நடக்க பழக வேண்டும்,பின்னாளில் ஓட பயன்படும்,

ராமதாஸ் போல அவளை சுற்றும் பிற ஆண்களின் நாடக காதலை எதிர்க்க வேண்டும்.போட்டியை குறைக்கும்,

இப்படி நீங்கள் செய்தால் காதலில் மோடி போல திட்டமிட்டு ஜெயிக்கலாம்,

ஒருவேளை அவள் சோனியா போல உங்களை ஏமாற்றிவிட்டால் தா.பாண்டியன் போல புலம்ப கூடாது,

கேப்டன் போல ரெண்டு ரௌண்டு விட்டு டி.ஆர் போல கட்சியை கலைத்து எங்காவது வீட்டோடு மாப்பிள்ளை ஆகிட வேண்டும்