Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

அழகே கொல்லுதே!

மதுவருந்திவிட்டு ஓட்டுபவன் கூட
வீடு போய் சேர்கிறான்...

ஆனால்..
எதிரே உனைக் கண்டவனெல்லாம்

புளியமரத்தில் மோதி சாகிறான்...

புன்னகை!



சிறு கல் போதும்
கண்ணாடி உடைய..

சிறு சொல் போதும்
மற்றவர்களை காயப்படுத்த..

சிறு புன்னகை போதும்
உலகம் உன் வசப்பட..

ரத்தப் பாசம்!



ரோஜா பூவின் மீது
பாசத்தை வைப்பதை விட..
ரோஜா முள்ளின் மீது
பாசத்தை வை..

அதுதான் தொட்ட உடன்
ரத்தப் பாசத்தை காட்டும்..!

புவி வெப்பம் குறைப்போம்!!



வளர விடுங்கள் எங்களை..
வாழ வைப்போம் உங்களை...


இப்படிக்கு
மரங்கள்

காதல்!



நீ பார்த்த பார்வையில்
பற்றிக் கொண்ட தீக்குச்சி நான்..
எரிந்து கொண்டே இருப்பேன்!

திரும்பி வந்து
நீ அணைக்கும் வரை.

நண்பேன்டா



தினமும் திட்டும்
'அப்பா'வின் வார்த்தையை விட..

திட்டாமல் நகரும் நண்பனின் மௌனம்
கொடியது....!

நட்பு


நிலவு போல்
நீ இருந்தாலும் இல்லை என்றாலும்

வானம் போல்
நான் என்றும் உன்னுடன் இருப்பேன்..

என்றும் உன் நட்புடன்...

நாள்காட்டி


"என்னை அலட்சியமாக
கிழித்து எறியாதே!



உன் லட்சியத்தில்
ஒரு நாள் குறைகிறது
என்பதை நினைவில் வைத்துக்கொள்..!

சிரிப்பு கவிதை:

அழகை பற்றி
எழுத சொன்னார்கள். . .

நான் உன்னை
பற்றி எழுதினேன் . . .


அடி பின்னி விட்டார்கள். . !

கவிதை..

தண்ணீரில்தான் மீன்கள் துள்ளி விளையாடும்.
முதன்முறையாக
மீன்களில் தண்ணீர் துள்ளி விளையாடுவதை காண்கிறேன்.
அவள் அழுதபோது. . .

ஒரு முத்தம்

அனுமதி கேட்கவும் இல்லை...
அனுமதி வழங்கவும் இல்லை..
ஆனால் பிடிவாதமாக ஒரு முத்தம்...

"கன்னத்தில் கொசுக்கடி"
பிரிவை கண்டு கவலை கொள்ளாதே..
பிரிந்துதான் ஆகவேண்டும்..

நாங்கள் பிரிந்தால்தான், நீங்கள் உலகை ரசிக்க முடியும்..
"இமைகள்"

கவிதை

கடவுளை வழிபட ஆசைதான்

ஆனால்
வழிபடும் அந்த ஒரு நொடியில்
உன்னை மறந்து
கடவுளை நினைத்து விடுவேனோ
என்ற பயம் எனக்கு!

அம்மா

புரண்டு படுத்தால் எங்கே நாம் மிரண்டு போவோமோ என்று
கருவில் இருந்தே நமக்காக தூக்கத்தை தொலைத்து விட்டு
இரவில் கூட எரிந்த சூரியன் "அம்மா"