மருத்துவம்

உடல் எடை அதிகரித்தால் மூட்டுவலி, இதயக்கோளாறுகள் போன்ற பல்வேறு நோய்களும் கூடவே வந்து விடும்.

இளைத்தவனுக்கு எள்ளு, கொளுத்தவனுக்கு கொள்ளு என்பது பழமொழி. உடல் மெலிந்து இருப்பவர்கள் உணவில் எள்ளை அதிகம்  சேர்த்துக்கொண்டால் எடை கூடும். அதுபோல் உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்கள் கொள்ளு பயன்படுத்துவது நல்லது. கொள்ளு பருப்பை  ஊறவைத்து அந்த தண்ணீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்டநீர் வெளியேறும். ஊளைச்சதையை குறைக்கும் குணம் கொள்ளுக்கு உண்டு.கொள்ளு பருப்பை வேக வைத்து உண்ணலாம். வறுத்தும் சாப்பிடலாம். 

கொள்ளை வேகவைத்து தண்ணீரை குடித்தால் ஜலதோஷம் கட்டுப்படும். அரிசியும் கொள்ளுபருப்பும் சேர்த்து கஞ்சி வைத்து குடிக்கலாம். கொள்ளை  ஆட்டி பால் எடுத்து சூப் வைத்தால் சுவையாக இருக்கும். பொடி செய்து ரசம் வைக்கும் போதும் பயன்படுத்தலாம்சோம்பை அவித்து தண்ணீர்  குடித்தால் எடை குறையும். கேரட்டை துருவி தேன் விட்டு சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரையும்.கடுக்காய், தான்றிக்காய்,  நெல்லிக்காய் பொடியை தினமும் காலை வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் போட்டு தேன் கலந்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்.

தினமும் 5 கப் காய்கறி அல்லது பழங்கள் சாப்பிட வேண்டும். கீரை வகைகள் அல்லது கொடியில் காய்க்கும் பீன்ஸ், அவரை, பூசணி, புடலங்காய்  போன்றவற்றை அதிகம் சேர்க்கவும். ஆனால் மாம்பழம், பலாப்பழம் போன்ற பழங்கள் உடல் எடையை கூட்டும். பப்பாளி, முள்ளங்கி உடல் எடையை  குறைக்கும். வாழைத்தண்டு, அருகம்பூல் சாறு நல்ல பலன்தரும். தினமும் காலை இஞ்சி சாறுடன், தேன்கலந்து 40 நாட்கள் குடித்து வந்தால்  தொப்பை குறையும்.


மருத்துவக் குறிப்புகள்
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக்கி வெந்நீரில் கலந்து உட்கொள்ள அஜீரணம் காரணமாக ஏற்படும் வாந்தி நிற்கும். வாயுத் தொல்லைகள் அகலும்.
• கஸ்தூரி மஞ்சளை கருந்துளசி இலையுடன் சேர்த்து அரைத்து உடலில் பூசி வெந்நீரில் நீராட எவ்வித சரும நோயும் வராது.
• முழு நெல்லிக்காய் 4, பச்சை மிளகாய் 2, வெல்லம் சிறிதளவு மூன்றையும் சேர்த்து நன்றாக அரைத்துச் சாப்பிடுவதன் மூலம் ஜீரணக் கோளாறுகளுக்கு தீர்வு காணலாம்.
• தினமும் இரவில் பாலுடன் சிறிதளவு கடுக்காய் பொடியைக் கலந்து குடிக்கவும். இது எல்லாவிதமான இதய நோயையும் தடுத்து நிறுத்தும். மாரடைப்பும் வராமல் தடுக்கும். இதயம் வலுவடையும்.
• துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால், தொண்டைப் புண் ஏற்படாது.
• வல்லாரை கீரை நினைவாற்றலை அதிகரிக்கும். பாக்டீரியாக்களை அழிக்கும், காயங்களை குணப்படுத்தும்.


நச்சுக்கடி முறிவு மருத்துவம்

மருத்துவரை உடனடியாக அணுக முடியாதநிலையில் மட்டுமே கீழ்க்கண்ட அவசர மருத்துவதத்தைப்பின்பற்றவும். பின்னர் மருத்துவர் ஆலோசனை அவசியம்.

கண்ணாடி விரியன்: பாகல் இலைச்சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுக்கவும்.

நல்ல‬ பாம்பு: வாழைப்பட்டைகளைப் பாய் போல் பரப்பி படுக்க வைத்து, வாழைப்பட்டைச் சாறு உட்கொள்ளச் செய்க.

‪‎தேள்‬: கொட்டிய இடத்தில் வெங்காயத்தையும் சுண்ணாம்பையும் ஒன்றாகக் கலந்து தேய்க்கவும்.

‪‎வண்டு‬: கார வெற்றிலை 2 எடுத்து, 8 மிளகு சேர்த்து உண்க. சாரத்தை விழுங்குக. தெரியாத பூச்சுக்கடிக்கும் இம்மருந்தையே பயன்படுத்துக.

‪‎சிலந்தி‬: ஆடாதொடை இலை, பச்சை மஞ்சள், மிளகு சேர்த்து அரைத்துக் கடிவாயில் கட்டவும்.

வெறிநாய்‬: மஞ்சளையும் பிரண்டையையும் சம அளவாக எடுத்து மைபோல் வைத்து நல்லெண்ணெயில் வதக்கி கடிபட்ட இடத்தில் கட்டவும்.

எலி‬: வெள்ளெருக்கம் பாலைத் தடவினால் அந்த இடம் புண்ணாகிவிடும். பின்னர் ஆற்றிவிட விஷம் நீங்கும்.

‪‎பூனை‬: தூய்மையாக்கிய குப்பமேனி வேரை அம்மியில் வைத்து, பசும்பால்
விட்டு வெண்ணெய் பதமாக அரைத்தெடுத்து காய்ச்சின பசும்பாலில் கரைத்துப் பருகுக. ஒரு வாரம் காலை மாலை பருகுக.

பூரான்‬: பஞ்சை மண்ணெண்ணெயில் நனைத்துக் கடிபட்ட இடத்தில் பரபரவென்று தேய்க்கவும். நெருப்புப் பக்கம் போகக்கூடாது.

நட்டுவாக்காலி‬: கொப்பரை அல்லது முற்றிய தேங்காயை மென்று விழுங்கவும். குழந்தையாயின் தேங்காய்ப்பாலைப் பிழிந்து தரவும்...

நாய்க்கடிக்கும் இது உகந்தது.



அம்மை நோய் தாக்காமல் விடுபடும் வழிகள்

சூரிய கதிரின் நேரடி தாக்குதலால் மயக்கம், தலை சுற்றல், தோல் வியாதி, வேர்க்குரு, கட்டி போன்றவைகள் ஏற்படக்கூடும். அதனால், பகல் 11 முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. அப்படியே வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் வெள்ளை நிறக்குடையை பிடித்துக் கொண்டோ அல்லது தொப்பி அணிந்தோ செல்ல வேண்டும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு அதிகம் தண்ணீர் கொடுக்க வேண்டும்.
இளநீர், பழங்கள் மற்றும் பழச்சாறுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்க பருத்தி உடைகளை உடுத்த வேண்டும். குழந்தைகளை வெயிலில் அழைத்து செல்ல கூடாது. பெண்கள் வெயிலில் போய்விட்டு வந்தவுடன், பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க கூடாது. கண்ணுக்கு தெரியாத நுண்ணிய கிருமிகள் இருக்கும். அதனால், குளித்துவிட்டு சிறிது நேரம் கழித்து தான், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
சர்க்கரை நோய், நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் மற்றும் முதியவர்கள் உச்சி வெயில் நேரத்தில் வெளியே செல்லக்கூடாது. சுகாதாரமற்ற தண்ணீரை குடிப்பதால் காலரா, மலேரியா, டைபாய்டு காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் எளிதாக வரக்கூடும். அதனால், தண்ணீரை நன்றாக காய்ச்சி, ஆறவைத்து குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.


தண்ணீரை அருந்துவதால் ஏற்படும் பலன்கள்
1.விழித்ததும் அருந்தும் 2 கிளாஸ் நீரால் உள்ளுறுப்புகள் சுறுசுறுப்படையும்.
2.உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் ஜீரணம் அதிகரிக்கும்.
3.குளிப்பதற்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் தாழ்வு இரத்த அழுத்தத்துக்கு உதவும்.
4.தூங்குமுன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் மாரடைப்பிலிருந்து தப்பலாம்...!

ஆரோக்கியமாக வாழ..

* தூங்கப் போவதற்கு முன், தினமும் கை, கால்கள், முகத்தை கழுவுங்கள்; பற்களையும் சுத்தம் செய்யுங்கள். சிறிது நேரம் வாய்க்குள் தண்ணீரை வைத்து, நன்றாக வாயை கொப்பளியுங்கள்.
* தினமும் நன்றாக தூங்குங்கள். மாதத்தில் ஒரு முறையாவது கண்ணாடி முன் நின்று, உங்கள் உடலை பாருங்கள். அப்படி பார்த்தால், உடலில் ஏற்படும் சுருக்கங்கள், படைகள் போன்றவைகளை கண்டறியலாம்.
* உணவில் பச்சை காய்கறிகளையும், பழ வகைகளையும் தேவையான அளவு சேருங்கள்.
* முடிந்த அளவு வாகன பயணங்களை மேற்கொள்ளாதீர்கள்; அதிகமான தூரம் நடந்து செல்ல முயற்சி செய்யுங்கள்.
* தினமும் குறைந்தது, 50 முறை உட்கார்ந்து எழுவது நல்லது. அப்படி செய்தால் இடுப்பு அழகுப்படும்; தொந்தியும், வயிறும் குறையும்.
* குளிக்கும் போது எப்போதும் குதிகாலையும், கால் விரல்களையும் தேய்த்து கழுவுங்கள்.
* படுக்கைக்கு அருகிலும், வேலை பார்க்கும் இடத்துக்கு அருகிலும், ஒரு பாட்டிலில் தண்ணீர் எடுத்து வைத்து கொள்ளுங்கள். தேவைப்படும் போதெல்லாம் தண்ணீர் குடியுங்கள்.
* முளைவிட்ட கடலை, சிறுபயறு போன்றவைகளை காலை உணவில் சேர்க்க வேண்டும்.
* கை நகங்களை வெட்டி சுத்தம் செய்வதை, கடமையாக கொள்ளவும்.
* உறங்கும் போது பட்டு துணிகளை அணியுங்கள்.
* அதிக சூடு, அதிக குளிர் உணவுகள் பற்களுக்கு கேடு பயக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
* இரவு இனிப்பு பலகாரங்கள் சாப்பிட்டால், மறக்காமல் பற்களை சுத்தப்படுத்தி விடுங்கள்.
* இரவில் அதிக நேரம் விழித்திருப்பதும், பகலில் தூக்கம் போடுவதும் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல.
* கொழுப்பு நிறைந்த எண்ணெயை உணவில் சேர்க்காதீர்கள்; அது, உடல் அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் கேடு பயக்கும்.
* தினமும் காலையில் தேநீரோ, குழம்பியோ(காபி)குடிப்பதற்கு முன், ஒரு பழம் சாப்பிடுவது நல்லது.
* தினமும் காலையில், 10 நிமிடமாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.


ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி
உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர்.
இந்த நிலைமையை நீக்க, மருத்துவரிடம் சென்று இதற்கு ஏதாவது மாத்திரை, மருந்து வாங்கி சாப்பிடலாம் என்று, மருத்துவமனையில் வரிசையில் காத்திருந்து அவரை பார்த்தால் பல பரிசோதனைகளை செய்யச் சொல்லுவார். அவர் கூறிய பரிசோனைகள் அனைத்தும் செய்து, அந்த பரிசோதனைகள் அனைத்தும் அவரிடம் காண்பித்தால், உங்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறது என்று கூறுவார். நான் உங்களுக்கு மாத்திரை, மருந்து எழுதித்தருகிறேன். ஆறு மாதங்கள் சாப்பிடுங்கள் சரியாகிவிடும் என்பார். அவர் கொடுக்கும் அதிக விலையுள்ள மாத்திரைகளையும், மருந்துகளையும் விலை கொடுத்து வாங்கி, அவருக்குரிய கட்டணத்தையும் கொடுத்து, ஆறுமாதம் சாப்பிட்டாலும் ஏதோ சிறிது பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு உள்ளதே தவிர, மறுபடியும் பழைய நிலையில் பாதிகூட சரியாகவில்லை.
நமது உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது அந்த அணுக்கள் குறைந்த ரத்தம் உடல் முழுவதும் உற்சாகமாக ஓட முடிவதில்லை. நமது உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்கமுடி வதில்லை. உடல் களைப்பு அடைகிறது. பத்து பேர்கள் செய்யவேண்டிய வேலையை இருவர் செய்வார்களானால், எவ்வளவு தாமதம் ஆகுமோ, எவ்வளவு தடங்கல் ஏற்படுமோ, அதே தடங்கலும், தாமதமும் நம் உடலில் ஏற்படுகிறது. உடலில்
ஹீமோகுளோபின் குறையும் பொழுது மேலே குறிப்பிட்ட அத்தனை குறைபாடுகளும் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுகிறது.
நமது உடல் அதற்கு தேவையான சத்துக்களை, நாம் உட்கொள்ளும் ஆகாரத்திலிருந்து பிரித்து எடுத்துக் கொள்ளுகிறது. எவ்வளவு சத்துக்கள், எந்தெந்த சத்துக்கள் தேவையோ, அந்த அளவு மட்டும் உறிஞ்சி எடுத்துக்கொண்டு, மீதி உள்ளவற்றை கழிவு பொருட்களாக உடலிருந்து வெளியேற்றி விடுகிறது. அதிகமான சத்துக்களை நாம் உண்டாலும், அத்தனை அளவு சத்துக்களையும் உடல் ஏற்றுக்கொள்வதில்லை. மீதியை கழிவுப் பொருட்களாக தள்ளிவிடுகிறது.
ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14 - 18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12 - 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. ரத்தத்தில் எவ்வளவு அளவு ஹீமோகுளோபின் இருக்கிறது என்பதை சோதனைச் சாலையில் ரத்தத்தை பரிசோதிக்கும் பொழுது தெரியவரும். ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும், உடலில் ரத்த ஓட்டத்தின்போது நுரையீரலுக்குச் சென்று நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை ரத்தம் ஏற்று உற்சாகம் பெறுகிறது. பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை கார்பன்டை ஆக்ûஸடு ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது. பிறகு உற்சாக ரத்த ஓட்டமாக மாறி உடலுக்கு சக்தியூட்டுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை ரத்தத்தில் ஏற்றுக்கொண்டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி, அவைகளை நன்கு இயக்கி, உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது.
உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது.
நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி அதில் 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள்.
காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.
பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.
மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள்.
இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள்.
1-வது நாள் 1, 1, 1, -3.
2-வது நாள் 2, 2, 2, = 6.
3-வது நாள் 3, 3, 3, = 9.
4-வது நாள் 4, 4, 4, = 12.
5-வது நாள் 4, 4, 4, = 12.
6-வது நாள் 4, 4, 4, = 12.
7-வது நாள் 3, 3, 3, = 9.
8-வது நாள் 2, 2, 2, = 6.
9-வது நாள் 1, 1, 1, = 3.
ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப்பாருங்கள்.
தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டபடி செய்து பாருங்கள். இப்பொழுது உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின்கள் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும். இந்த ஹீமோகுளோபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும்.
உடலில் உற்சாகம் பெருகும். வலிவோடும், வனப்போடும் உடல் மிளிரும். கருப்பு திராட்சை ஊறிய நீர்,ரத்தத்தில் கலந்து ஹீமோகுளோபின்கள் உருவாக காரணமாக இருக்கும்.
செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கலாம்.

மதுவினால் ஏற்படும் தீமைகள்
* ஆரோக்கியமாக இருக்கும் உடம்பு அழியத்துடங்கும்.
* குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும். சில சமயம் அதுவே நண்பர்களின் பிரிவிற்கு காரணமாக கூட அமையும்.
* நீ குடிப்போதையில் இருக்கும் போது என்ன சொன்னாலும் உலகம் உன்னை நம்பாது.
* நீ நிதானமாகப் பேசினாலும் கூட 'இது குடிகாரன் பேச்சு' என்று உலகம் உன்னை பின்னே தள்ளிவிடும்.
* நீ குடிக்கும் மது உன் குடும்பத்தின் வாழ்வை படுகுழியில் தள்ளிவிடும்.