மணல் சிற்பக் கலையில் உலகக் கோப்பை வென்ற இந்தியர்

மணல் சிற்பக் கலையில் உலகக் கோப்பை பரிசு பெற்ற இந்தியக் கலைஞர்
சுதர்சன் பட்நாயக்
அமெரிக்காவின் அட்லாண்ட்டிக் சிட்டியில் 2014ம் ஆண்டிற்கான முதல் உலகக் கோப்பை மணல் சிற்பப் போட்டி 19.06.2014ம் தேதி நடைபெற்றது. உலக நாடுகளில் இருந்து மொத்தம் 20 பிரபல கலைஞர்கள் கலந்து கொண்ட இந்தப் போட்டியில் சுதர்சன் பட்நாயக்கின் சிற்பத்திற்கு முதல் பரிசு கிடைத்தது. முதன்முறையாக நடைபெற்றுள்ள இந்த உலகக் கோப்பை போட்டியில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது குறித்து மிக்க மகிழ்ச்சியடைகின்றேன் என்று பட்நாயக் தெரிவித்தார். இந்தியாவிற்கு பெருமை சேர்த்த சுதர்சன் பட்நாயக்கிற்கு வாழ்த்துக்கள்!

0 கருத்துரைகள்: