Showing posts with label மது. Show all posts
Showing posts with label மது. Show all posts

என் கேள்விக்கு என்ன பதில்?

ஒரு சீடன் குருவைப் பார்த்துக் கேட்டான் 'குருவே நான் பேரிச்சம்பழங்களைச் சாப்பிட்டால் மதக்கோட்பாடுகளைப் புறக்கணித்தவன் ஆவேனா?' 'இல்லையே தாராளமாகச் சாப்பிடலாம்' என்றார் குரு. உடன் சீடன் கேட்டான். 'கூடவே ஈஸ்ட் சேர்த்துக் கொண்டால் அது தவறா குருவே?' என்றான். 'அதிலொன்றும் தவறில்லை சாப்பிடலாம்' மறுபடியும் சீடன் கேட்டான் 'மேலும் சிறிது நீர் உட்கொண்டால் என்ன குருவே?' 'ஒரு குறையும் இல்லை' என்றார் குரு. அவர் முடிப்பதற்குள் சீடன் கேட்டான் 'இம்மூன்றும் சேர்ந்ததுதான் பேரிச்சம்பழ மது. அதை மட்டும் நான் ஏன் அருந்தக்கூடாது என்கிறீர்கள் குருவே'
குரு கேட்டார் 'கைப்பிடி மண்ணை அள்ளி உன் தலையில் போட்டால் உனக்கு வலிக்குமா?' என்றார். 'வலிக்காது குருவே' என்றான். 'மேலும் சிறிது நீரை ஊற்றினால்...' குரு கேட்டார். 'அதுவும் வலிக்காது குருவே' என்றான். குரு அமைதியாகச் சொன்னார் 'இரண்டையும் சரியான வகிதத்தில் கலந்து சுட்ட செங்கல்லாக்கி உன் தலையில் போட்டால் என்ன ஆகும்?' என் தலை பிளந்துவிடும் குருவே என்றான். 'உன் கேள்விக்கான விடை கிடைத்துவிட்டது' என்றார் குரு.

தத்துவம்



காலியாகி போன மது புட்டி சொன்னது:

இன்று உன்னால் நான் காலி ஆனேன்!

நாளை நீ என்னால் காலி ஆவாய்!!


மது அருந்துவதை நிறுத்துங்கள்.
உள்ளமும் இல்லமும் மலரும்..