Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

நம்ம மொழி!

நம்ம மொழி செம்மொழி..!!

"அம்மா".. மூன்றெழுத்து..!!

"அப்பா".. மூன்றெழுத்து..!!

"தம்பி"..  மூன்றெழுத்து..!!

"தங்கை".. மூன்றெழுத்து..!!

"மகன்".. மூன்றெழுத்து..!!

"மகள்".. மூன்றெழுத்து..!!

"காதலி".. மூன்றெழுத்து..!!

"மனைவி".. மூன்றெழுத்து..!!

"தாத்தா".. மூன்றெழுத்து..!!

"பாட்டி".. மூன்றெழுத்து..!!

"பேரன்"..மூன்றெழுத்து..!!

"பேத்தி".. மூன்றெழுத்து..!!

இவை அனைத்தும்.. அடங்கிய..

"உறவு".. மூன்றெழுத்து..!!

உறவில் மேம்படும்..
"பாசம்".. மூன்றெழுத்து..!!

பாசத்தில் விளையும்..
"அன்பு".. மூன்றெழுத்து..!!

அன்பில் வழியும்..
"காதல்".. மூன்றெழுத்து..!!

காதலில் வரும்..
"வெற்றி".. யும்
மூன்றெழுத்து..!!

"தோல்வி"..யும்
மூன்றெழுத்து..!!

"காதல்" தரும் வலியால் வரும்..
"வேதனை".. மூன்றெழுத்து..!!

வேதனையின் உச்சகட்டதால்
வரும்..
"சாதல்".. மூன்றெழுத்து..!!

சாதலில் பறிபோகும்..
"உயிர்"..மூன்றெழத்து..!!

இது நான் எழுதிய..
"கவிதை".. என்றால்..
அதுவும் மூன்றெழுத்து..!

இது
"அருமை".. என்றால்.. அதுவும்
மூன்றெழுத்து..!!

"மொக்கை".. என்றால்..
அதுவும் மூன்றெழுத்து..!!

கமெண்ட்ஸ் எப்படி வருமோ..
என்ற
"கவலை".. யும்
மூன்றெழுத்து..!

"நட்பு".. என்ற மூன்றெழுத்தில்
இணைந்து படித்த..
அனைவருக்கும்
"நன்றி".. என்பதும்
மூன்றெழுத்து..!!

"மூன்று"..உம்
மூன்றெழுத்தே..!!

இவை அனைத்தும் அடங்கிய..
"தமிழ்".. உம் மூன்றெழுத்தே..!!

"வாழ்க".. "தமிழ்"...!!

இந்தியை பின்னுக்கு தள்ளியது தமிழ்!


இந்தியை பின்னுக்கு தள்ளி தமிழ் மொழி!

இந்திய மொழிகளில் அதிகபட்சமாக ஆறு நாடுகளில் பேசப்படும் மொழியாக

தமிழ் மொழி அறியப்பட்டுள்ளது.
இந்தி நான்கு நாடுகளில் மட்டுமே அதிகாரபூர்வமாக பேசப்படும் மொழியாக அங்கீகரிக்கப்படுக்கப்பட்டுள்ளது.


7102 உலக மொழிகள் கொண்ட பட்டியலில்
தமிழ் மொழி 14 வது இடத்தை அடைந்து உள்ளது.

திருக்குறள் பற்றிய தகவல்கள்

திருக்குறளில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன.
திருக்குறளில் ‘தமிழ்‘ என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812
திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133
(அறத்துப்பாலில் 380 குறட்பாக்கள்,
பொருட்பாலில் 700 குறட்பாக்கள்,
காமத்துப்பாலில் 250 குறட்பாக்கள்)
திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330
திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளால், ஏழு சீர்களை கொண்டது.
திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000
திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194
திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம்பெறவில்லை
திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்- அனிச்சம், குவளை
திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்
திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி
திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள
திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்
திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்
திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி
திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங
திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்
திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்
திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்
திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்
திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்
திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.
திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.
ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
திருக்குறள் இதுவரை 80 மொழிகளில் வெளிவந்துள்ளது.
திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்
திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.