பேபல் கணக்கு (Paypal Account)

பேபல் என்றால் என்ன?

பேபல் ஆன்லைனில் மிக விரைவாகவும் பாதுகாப்பாகவும் பணம் அனுப்பவும் பெற்றுக்கொள்ளவும் பயன்படும் உலகின் முதன்மையான பணப்பரிமாற்றதளம். காசோலைகளுக்கும் வரைவோலைகளுக்கும், பணவிடைகளுக்கும் மாற்றாக டிஜிட்டல் முறையில் பணப்பட்டுவாடா செய்ய உதவும் இ-காமர்ஸ் நிறுவனமே பேபல்.இந்நிறுவனம் 2000 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. பேபல் நிறுவனத்தின் சர்வதேச தலைமையகம் சிங்கப்பூரில் அமைந்துள்ளது. இந்திய நாட்டில் சென்னை மற்றும் பெங்களூருவில் பேபல் தலைமையகங்கள் செயல்படுகின்றன.


பேபல் சிறப்பம்சங்கள்:

உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 20 கோடிக்கும் அதிகமான மக்கள் பேபல் பணபரிமாற்ற சேவையை பயன்படுத்துகிறார்கள். 190 சந்தைகளில் வர்த்தகம் செய்து வருகிறது. 25 நாடுகளின் நாணய மதிப்புகளில் உடனடியாக பணம் அனுப்பவும் பெறவும் முடியும். பாதுகாப்பான பணபரிமாற்ற சேவைக்காக விருதுகளை பெற்றுள்ளது.

பேபல் உறுப்பினர் கணக்கு துவங்குவது எப்படி?

குறிப்புநமது இந்திய நாட்டில் பேபல் உறுப்பினர் கணக்கு துவங்க உங்களிடம்  நிரந்தர கணக்கு எண்(Pan Card) இருக்க வேண்டும்.



பேபல் கணக்கு துவங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்:
1.மின்னஞ்சல் முகவரி: பேபல் பணபரிமாற்ற தளத்தில் உங்களின் 
மின்னஞ்சல் முகவரியே உறுப்பினர் கணக்கு. அடுத்து கடவுச்சொல்(Password) கொடுத்து விட்டு, அப்படியே நினைவாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

2 & 3 ஆகிய நம்பர் கொடுத்துள்ள இடம் மிக முக்கியம். 2- குறிப்பிட்டுள்ள இடத்தில் உங்களின்  முழுப் பெயர் (எ.கா: என் பெயர் Senthilkumar), அடுத்து வரும் Middle name என்ற கட்டத்தில் எதுவும் கொடுக்க வேண்டாம். 3 குறிப்பிட்டுள்ள கட்டத்தில், அதாவது last name -ஆக உங்களது இனிசியலைக் கொடுங்கள் (எ.கா: S ).

நீங்கள் உறுப்பினர் கணக்கு துவங்கும் பெயரில் உங்களுக்கு நமது நாட்டில் வங்கிக் கணக்கு இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை எனில் உங்கள் வீட்டில் யாருடைய பெயரில் வங்கிக் கணக்கு இருக்கிறதோ, அவர்களது பெயரில் கணக்கினைத் தொடங்குங்கள். ஏனெனில் பின்னர், உங்களது வங்கி அக்கவுண்டை பேபலுடன் இணைக்கும் பொழுது, பேபலில் கொடுத்துள்ள பெயரும், நம்மூர் வங்கியில் இருக்கும் பெயரும் சரியாக ஒன்றவில்லை என்றால் நிச்சயமாக பணத்தினைப் பெற முடியாது.

அடுத்து யார் பெயரைக் கொடுத்தீர்களோ அவரது பிறந்த தினத்தினைக் கொடுங்கள்.

4 உங்களின்  
நிரந்தர கணக்கு எண்ணை (PAN Card Number) உள்ளீடு செய்யுங்கள். இல்லாவிடில் 250 ரூபாய் செலவு செய்து வாங்கிக் கொள்ளுங்கள். அதுவும், யார் பெயரில் அக்கவுன்ட் உருவாக்குகிறீர்களோ, அவரது பெயரில் நிரந்தர கணக்கு எண் இருக்க வேண்டும்.

அடுத்து, வீட்டு முகவரி மற்றும் கைப்பேசி எண்ணைச் சரியாகக் கொடுத்துவிட்டு Agree & Create a account என்றுள்ள பொத்தானை அழுத்துங்கள்.

உங்களின் மின்னஞ்சல் முகவரியை உறுதி செய்து கொள்ள  ஒரு 'VERIFICATION LINK' அனுப்பப்படும். அதை அழுத்தி உங்களது பேபல் உறுப்பினர் கணக்கில் உள்நுழையலாம்.

பேபல்-இல் 'VERIFIED' செய்யப்பட்ட கணக்கு இருந்தால்தான்  இந்திய வங்கிகளுக்கு பணம் பெற முடியும்.

1. Purpose code (நோக்க குறியீட்டு எண்)

2. Bank account details (வங்கி உறுப்பினர் விவரங்கள்)

PTC(Paid to Click) இணையதளங்களில் பணம் சம்பாதிப்பவர் எனில் நீங்கள் (Advertising and market research) என்ற Purpose code ஐ தேர்வு செய்யவும். பின்வரும் படத்தில் நீங்களே காணலாம்.



Purpose Code தேர்வு செய்த பிறகு

பேபல் பணபரிமாற்ற தளத்தில் இந்திய வங்கி கணக்கை இணைப்பது எப்படி?

உங்களது பேபல் உறுப்பினர் கணக்கை verified செய்துகொள்ள select 
profile and then Add Bank Account என்பதை தேர்வு செய்யவும் .


Name On Account:  உங்களின் பேபல் கணக்கில் இருக்கும் பெயரும், வங்கிக் கணக்கில் இருக்கும் பெயரும் ஒரே பெயராக இருக்க வேண்டும்.

Bank Name: அடுத்து வங்கியின் பெயர் (Canara Bank/Axis Bank/SBI)

NEFT IFSC Code: இது உங்களின் வங்கி காசோலை புத்தகத்தில் அச்சிடப்பட்டு இருக்கும் அல்லது, வலைப்பூவில் இந்தியாவில் இருக்கும் அனைத்து வங்கிக் கிளைகளின் IFSC எண்கள் உள்ளது.
பேபல் நிறுவனம் உங்களின் வங்கி கணக்கிற்கு 2  பணப் பரிவர்த்னைகளை நிகழ்த்தும்.  அந்தப் பரிவர்த்னைகளின் பண மதிப்பு என்ன என்பதை  2-3 நாட்கள் கழித்து உங்களின் வங்கிக் கணக்கில் பார்க்கவும்.  அந்த மதிப்பை நீங்கள் உங்களின் Paypal கணக்கில் உள்ள “Confirm Bank” எனும் பகுதியில் சென்று கொடுத்தால் உங்களின் பேபல் உறுப்பினர் கணக்கு சரிபார்க்கப்பட்டு விடும்.

Verified செய்யப்பட்ட பேபல் உறுப்பினர் கணக்கு பின்வருமாறு இருக்கும்

பேபல் பணபரிமாற்ற தளத்திலிருந்து இந்திய வங்கிகளுக்கு பணம் பெறுவது எப்படி?


உங்களின் பேபல் கணக்கில் குறைந்தபட்சம் $5 அமெரிக்க டாலர் உள்ளது என்று வைத்துகொள்வோம். உங்களின் பேபல் கணக்கு Verified செய்யப்பட்டதாக இருந்தால், இந்திய வங்கிகளுக்கு பணம் பெற நீங்கள் பேபல் பணபரிமாற்ற தளத்தில்  லாகின்  செய்ய வேண்டிய அவசியம் கூட கிடையாது. பேபல் பணபரிமாற்ற நிறுவனமே அன்றைய தேதியில் டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பிற்கு மாற்றி உங்களின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி விடுவார்கள். இது நமது நாட்டின் ரிசர்வ் வங்கி பேபல் பண பரிமாற்ற தளத்திற்கு இட்ட கட்டளையும் கூட. நமது இந்திய நாட்டு வங்கிகளுக்கு பணம் வந்துசேர 2 நாள் முதல் 7 நாள் வரை ஆகும்.