சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்!


நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்...

இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம்.

இப்படிக் காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல உடல் உபாதைகள் உருவாகிறது...

இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது...

நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும்பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்.

மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல்ப்பகுதியில்தான் இருக்கிறது. எனவே ஒருவர் காலை தொங்கப்போடாமல் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது.

எனவே, சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும்.
ஏனென்றால், இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும்பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.

சாப்பிடும்பொழுது காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாக செல்கிறது.

இந்திய வகை கழிவறை செல்லும்போது மட்டும்தான் காலை மடக்கி அமர்கிறோம்.
யுரோப்பியன் கழிவறையில் அமரும் பொழுது குடலுக்கு அதிக அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே கழிவு வெளியேறும்,
அதனால் தான் இப்பொழுது சிறுகுழந்தைகள் கூட யுரோப்பியன் வகையினை பயன்படுத்துவதால் அவர்களால் தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள்.

ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களால் சம்மணங்கால் போட்டுக்கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

எனவே முடிந்த வரை காலை தொங்கவைத்து அமர்வதை தவிருங்கள்!

எனவே யுரோப்பியன் வகை கழிவறைகளை தவிருங்கள்!

கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள்...

சாப்பிடும் பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும்...

சில வீடுகளில் அதற்கு வாய்ப்பில்லை என்று இருந்தால் டைனிங் டேபிளில் அமர்ந்து காலை மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்...

சாப்பிடும் முறை:

1. நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்கள்.

2. எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள்.

3. பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து கொண்டே சாப்பிட கூடாது.

4. சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க. போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்...

5. அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்...

6. பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்...

7. பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்...

8. ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிட பழகவும்...

9. இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்.

10. சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள் சாப்பிடுங்கள்... பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்.

11. சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும். இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்.

12. சாப்பிட வேண்டிய நேரம்...
காலை - 7 to 9 மணிக்குள்
மதியம் - 1 to 3 மணிக்குள்
இரவு - 7 to 9 மணிக்குள்

13. சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து தான் தூங்க வேண்டும்...

14. சாப்பிடும் முன்பும் பின்பும் கடவுளுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்...

அமருங்கள் சம்மணமிட்டு...
சாப்பிடுங்கள் முறையாக...
வாழுங்கள் ஆரோக்கியமாக!

நம்ம மொழி!

நம்ம மொழி செம்மொழி..!!

"அம்மா".. மூன்றெழுத்து..!!

"அப்பா".. மூன்றெழுத்து..!!

"தம்பி"..  மூன்றெழுத்து..!!

"தங்கை".. மூன்றெழுத்து..!!

"மகன்".. மூன்றெழுத்து..!!

"மகள்".. மூன்றெழுத்து..!!

"காதலி".. மூன்றெழுத்து..!!

"மனைவி".. மூன்றெழுத்து..!!

"தாத்தா".. மூன்றெழுத்து..!!

"பாட்டி".. மூன்றெழுத்து..!!

"பேரன்"..மூன்றெழுத்து..!!

"பேத்தி".. மூன்றெழுத்து..!!

இவை அனைத்தும்.. அடங்கிய..

"உறவு".. மூன்றெழுத்து..!!

உறவில் மேம்படும்..
"பாசம்".. மூன்றெழுத்து..!!

பாசத்தில் விளையும்..
"அன்பு".. மூன்றெழுத்து..!!

அன்பில் வழியும்..
"காதல்".. மூன்றெழுத்து..!!

காதலில் வரும்..
"வெற்றி".. யும்
மூன்றெழுத்து..!!

"தோல்வி"..யும்
மூன்றெழுத்து..!!

"காதல்" தரும் வலியால் வரும்..
"வேதனை".. மூன்றெழுத்து..!!

வேதனையின் உச்சகட்டதால்
வரும்..
"சாதல்".. மூன்றெழுத்து..!!

சாதலில் பறிபோகும்..
"உயிர்"..மூன்றெழத்து..!!

இது நான் எழுதிய..
"கவிதை".. என்றால்..
அதுவும் மூன்றெழுத்து..!

இது
"அருமை".. என்றால்.. அதுவும்
மூன்றெழுத்து..!!

"மொக்கை".. என்றால்..
அதுவும் மூன்றெழுத்து..!!

கமெண்ட்ஸ் எப்படி வருமோ..
என்ற
"கவலை".. யும்
மூன்றெழுத்து..!

"நட்பு".. என்ற மூன்றெழுத்தில்
இணைந்து படித்த..
அனைவருக்கும்
"நன்றி".. என்பதும்
மூன்றெழுத்து..!!

"மூன்று"..உம்
மூன்றெழுத்தே..!!

இவை அனைத்தும் அடங்கிய..
"தமிழ்".. உம் மூன்றெழுத்தே..!!

"வாழ்க".. "தமிழ்"...!!

என்னம்மா நீங்க இப்டி பண்றீங்கலேமா?

காட்டில் ஒரு புலி சிகரெட் பிடித்து கொண்டு நின்றிருந்தது.
அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு எலி சொன்னது "சகோதரா, ஏன் இவ்வாறு சிகரெட் பிடித்து உன் வாழ்க்கையை வீணாக்குகிறாய்... என்னுடன் வா, இந்த காடு எவ்வளவு அழகானது என்று காட்டுகிறேன்..." அதை கேட்ட புலி சிகரெட்டை காலில் போட்டு நசுக்கி விட்டு எலியுடன் நடந்தது...

சிறிது தூரம் சென்ற பொழுது அதோ ஒரு யானை உதட்டின் அடியில் 'ஹான்ஸ் 'வைத்துக் கொண்டு இருக்கிறது. எலி யானையிடம் கேட்டது" சகோதரா நீ ஏன் இப்படி ஹான்ஸ், பான்பராக் எல்லாம் உபயோகித்து உன் வாழ்க்கையை சீரழிக்கிறாய்.. வா இந்த காடு எவ்வளவு சுந்தரமானது என்று காட்டுகிறேன்..." இதை கேட்ட யானை ஹான்ஸை எல்லாம் எடுத்து எறிந்து விட்டு எலியுடன் சென்றது....

அவ்வாறு மூன்று பேரும் நடந்து போகும் பொழுது அதோ சிங்க மகாராஜா சாராயம் குடித்துக் கொண்டு நிற்கிறது... இதை கண்ட எலி சிங்கத்திடம் கேட்டது... "மகாராஜாவே, ஏன் இப்படி உங்களை நீங்களே அழித்துக் கொள்கிறீர்கள்... இந்த காட்டின் அழகினை மகாராஜா இதுவரை கண்டதுண்டா... என்னுடன் வாருங்கள் அடியேன் நான் காட்டுகிறேன்..." இதை கேட்ட சிங்கம் எலியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டது. இதை கண்டு சப்த நாடியும் ஒடுங்கிப் போன புலியும் யானையும் சிங்கத்திடம் கேட்டன... "மகாராஜாவே, தாங்கள் ஏன் இந்த சமாதான தூதுவனை அடித்தீர்கள்...?" அப்பொழுது சிங்கம் சொன்னது...

"இந்த பரதேசி கஞ்சா அடிச்சிட்டு இதையே தான் சொல்லி நேத்து என்னைய இந்த காடு பூராவும் நடக்க வெச்சான்... தினமும் இவனுக்கு இதான் வேலையே..."

இந்தியை பின்னுக்கு தள்ளியது தமிழ்!


இந்தியை பின்னுக்கு தள்ளி தமிழ் மொழி!

இந்திய மொழிகளில் அதிகபட்சமாக ஆறு நாடுகளில் பேசப்படும் மொழியாக

தமிழ் மொழி அறியப்பட்டுள்ளது.
இந்தி நான்கு நாடுகளில் மட்டுமே அதிகாரபூர்வமாக பேசப்படும் மொழியாக அங்கீகரிக்கப்படுக்கப்பட்டுள்ளது.


7102 உலக மொழிகள் கொண்ட பட்டியலில்
தமிழ் மொழி 14 வது இடத்தை அடைந்து உள்ளது.