சிரிக்க மட்டுமே!

1.
கணவன் – “இப்படி நாம அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டு இருப்பதை அக்கம் பக்கத்திலே இருப்பவங்கள் பார்த்தா சிரிப்பாங்க... தெரியுமா?“
மனைவி – “அப்போ நாம போடுற சண்டை அவ்வளவு தமாஷாவா இருக்கு!“

2.
கணவன் – “இந்தத் தீபாவளிக்கு உனக்குப் பட்டுப் புடவை!“
மனைவி – “அப்படியா! எதை வச்சி சொல்லுறீங்க?“
கணவன் – “உன் வளையலை வைச்சுத்தான் சொல்லுறேன்.“

3.
மனைவி – “ஏங்க நம்ம பொண்ணுக்கு வயசாகிட்டே போகுதே. அவளுக்குச் சீக்கிரமா ஒரு மாப்பிள்ளை பார்க்கக் கூடாதா?“
கணவன் – “அழகா லட்சணமா ஒரு மாப்பிள்ளை கிடைக்கிறவரை காத்திருக்கட்டுண்டி.“
மனைவி – “எங்கப்பா அப்படியா காத்திருந்தார்?“

4.
கணவன் – “என்ன இது மிக்ஸி, கிரைண்டர், புடவைன்னு ஏகப்பட்ட சாமான்களோட வேன்ல வந்து இறங்கிறே....!“
மனைவி – “நீங்க தானே சொன்னீங்க.... பேங்கில இருக்கிற நம்ம ஜாயிண்ட் அக்கவுண்டை குளோஸ் பண்ணனும்ன்னு. அதைத் தான் செய்துட்டு வர்றேன்.“

5.
கணவன் – “ஏன் நான் உள்ளாற வந்தவுடனே கண்ணாடியை எடுத்துப் போட்டுக்கிடுற?“
மனைவி – “டாக்டர் தான், தலைவலி வந்தவுடனே கண்ணாடியைப் போட்டுக்கச் சொன்னார்.“

6.
மனைவி – “வேலைக்காரி உங்க மேலே விழறாப்லே உரசிட்டுப் போறா.... நீங்க பேசாம நிக்கிறீங்களே....“
கணவன் – “திரும்பி வரட்டும்.... பதிலுக்கு நானும் உரசிக் காட்டுறேன் பாரு.“

7.
மனைவி – “வர வர எனக்கு இந்த நகை, புடைவைகள் பேரில் இருக்கிற ஆசையே விட்டுப் போயிடுச்சிங்க“
கணவன் – “நிஜமாவா சொல்லற?“
மனைவி – “ஆமாம். எத்தனை நாளைக்குத்தான் இந்தப் பழைய நகைகளையும், பழைய புடவைகளையும் கட்டிண்டு இருக்கிறது.....“

8.
கணவன் – “இதோபாரு.... நம்ம வீட்டுல சினிமாச் செலவு ரொம்ப அதிகமாயிட்டு வருது. இதைப் பாதியா குறைக்கணும். சரியா?“
மனைவி – “சரிங்க.... இனிமே நான் மட்டும் சினிமாவுக்குப் போறேன்.“

9.
கணவன் – “வரதட்சணை வாங்கிட்டு கல்யாணம் செஞ்சது என் மனசை உறுத்திக்கிட்டே இருக்குது“
மனைவி – “அதுக்காக இப்போ என்ன பண்ணுவதாம்...?“
கணவன் – “வரதட்சணை வாங்காம இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு பிராயச்சித்தம் செய்யலாம்ன்னு இருக்கேன்“
மனைவி – கர்ர்ர்ர்ர்ர்.....

10.
மனைவி – “நீங்க எனக்கு ஒரு பட்டுப் புடவை வாங்கித்தர்ற மாதிரி நேற்று கனவு கண்டேன்“
கணவன் – “இன்னைக்கு அதைக் கட்டிக்கிறதா கனவு கண்டுவிடு. சரியாய்ப் போயிடும்...“

11.
கணவன் – “அரை மணி நேரமா நான் கரடியா கத்துறேன். நீ பதில் பேசலைன்னா என்ன அர்த்தம்?“
மனைவி – “எனக்கு கரடி பாஷை புரியலேன்னு அர்த்தம்.“

வேரறுப்போம் சீமைக் கருவேல மரங்களை!


1950 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது விறகிற்கு பயன்படும் என்று வெளிநாட்டிலிருந்து சீமை கருவேலம் (Prosopis Juliflora) விதைகள் கொண்டுவரப் பட்டு இங்கே தூவப்பட்டன.
இதன் விஷத்தன்மை பற்றி முழுதாய் தெரியாமல்…!
கடந்த 62 ஆண்டுகளில் இவை தமிழகம் முழுவதும் கிளை படர்ந்து ஏறத்தாழ 25 சதவித விளை நிலங்களை ஆக்கிரமித்து பாழ்படுத்திக் கொண்டிருக்கின்றன. இதை வேருடன் களையாவிட்டால் நிலத்தடி நீரும் விஷமாகி விடும்.
சீமைக் கருவேல மரங்கள்
இந்த மரத்தினை பார்க்காத ஒரு தமிழன் தமிழ் நாட்டில் இருக்க முடியாது.
தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் வளர்ந்துக் கொண்டு இருக்கிற ஒரு மரம்.
எந்த ஒரு வறண்ட நிலத்திலும் எந்த ஒரு தட்ப வெப்பத்திலும் இது தழைத்து வளர்ந்து கொண்டு இருப்பதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள்.
சாலை ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல் வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் இது.
தமிழகத்தின் இன்றைய வறட்சியான நிலைக்கு இந்த மரங்கள் தான் காரணம் என்று உறுதியாக சொல்ல முடியும்.
இந்த கருவேல மரங்கள் எந்தவித வறட்சியிலும், கடும் கோடையிலும் நன்கு வளரக்கூடியது. மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலைப்படாது.
ஏனெனில் ஒரு கருவேலமரம் தனது வேர்களை பூமியின் ஆழத்தில் நாற்பது அடி, அகலத்தில் நாற்பது அடி வரையில் அனுப்பி மண்ணின் நீரை உறிஞ்சி, தன் இலைகளை வாடவிடாமல் பார்த்துக் கொள்கிறது.
இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது.
இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி இருக்கும் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தையும் இம்மரம் உறிஞ்சி விடுகிறது.
காற்றில் ஈரப்பதம் இருந்தால் கூட உறிஞ்சி விடுகிற இம்மரம் மனிதர்களையும் விட்டு வைப்பதில்லை.
தன்னை சுற்றி இருக்கிற மனிதர்களின் உடலில் இருக்கிற ஈரப்பசையையும், எண்ணெய்ப் பசையையும் கூட உறிஞ்சி விடுவதால் இந்த மரத்தின் அருகாமையில் வசிக்கிறவர்களின் உடல் தோல்கள் வறண்டு போய் விடுகிறது.
தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம். கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது யாருக்கும் இது வரை புரியவில்லை.
ஆனால், இதை அறியாமல் தமிழ் மக்கள் இன்னும் புதிதாக இம்மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள்.
தங்கள் வீடுகளுக்கும், வயல்களுக்கும் வேலியாக இம்மரத்தை நட்டு வைக்கிறார்கள்.
வணிக ரீதியாகவும் இதை நம் தமிழ்நாட்டில் விறகிற்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்.
இது பேராபத்தை இந்த மண்ணுக்கு செய்கிறது என்பதை அவர்கள் அரியாது இருக்கிறார்கள்.
இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது.
முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அது தான்.
இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகி விடும், அதாவது சினை பிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன் தான் பிறக்கும்.
ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றி விடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது.
இதன் பக்கத்தில் வேறு எந்த செடியும் வளராது, தவிர இம்மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.
காரணம் என்னவென்றால் இந்த சீமைக் கருவேல மரங்கள், பிராணவாயுவை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது.
ஆனால் கரியமிலவாயுவை மிக அதிக அளவில் வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுத் தன்மையாக மாறிவிடுகிறது.
நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.
அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஓர் இடத்தில் கூட காண முடியாது.
சில ஆண்டுகளுக்கு முன் ஒரு திட்டமிடலுடன் செயல் பட்டு இந்த மரத்தை அவர்கள் தேடி தேடி அழித்து இருக்கிறார்கள்.
வெட்டி போட்டு கொளுத்தி விட்டு சுற்றி நின்று கூத்தாடி இருக்கிறார்கள்.
அதனால் தான் இன்று கேரளா நீர் வளத்தில் அபரிமிதமான நாடாக இருக்கிறது.
அங்கே நீரானது பூத்துக் குலுங்குகிறது.
இப்போதும் இந்த மரத்தை அவர்கள் எங்கேயாவது கண்டு விட்டால் சாத்தானை கண்டு விட்டது போல் அலறி, அதை வெட்டி தீயிலிட்டு கொளுத்தி விட்டு தான் அப்பால் நகருகிறார்கள்.
கேரளாவில் தொழில்சாலைகளுக்கு விறகுக்கு என்ன செய்கிறார்கள் தெரியுமா?
நம் தமிழ் நாட்டிலிருந்து தான் விறகு செல்கிறது.
அவர்கள் தங்கள் ஆறுகளை பாதுகாக்க அதில் மண் அள்ள மாட்டார்கள்,
ஆனால் நம் ஆறுகளில் இருந்து மண் அங்கே போகும்.
கருவேல மரங்களை முற்றிலும் அழித்துவிட்டார்கள். ஆனால் அவர்களின் தேவைகளுக்கு மரம் இங்கே இருந்து செல்கிறது…!
சீமை கருவையை அழித்துவிட்டால் நம் நாடும் கேரளா
போல் குளுமை பெறும்.
இந்த மரங்களை நீங்கள் சிறிய செடியாக இருந்தால் கூட பிடுங்கி எறியுங்கள் !
அது வளரும் வரை காத்திருக்க வேண்டாம்.
நம் அடுத்த தலை முறை குழந்தைகளுக்கும் தெரியப்படுத்துங்கள்.
இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....
வதோடு மட்டும் நில்லாமல்.. நம் பாரம்பரிய பூ அரச மரம், புங்கை மரம் , வேப்ப மரம் போன்றவற்றை அந்த இடத்திலேயே நட்டு பராமரிப்போம்.
இந்த மரத்தை வேரறுப்போம்!! நம் மண்ணின் மாண்பை காப்போம்!!

படித்ததில் மனம் நெகிந்தது!

ஒரு மருத்துவர், நோயாளி ஒருவருக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதாக அழைக்கப்பட்டிருந்ததால்,
வேகமாக மருத்துவமனைக்குள் நுழைந்தார்...

விரைவாக தன் உடைகளை மாற்றிக்கொண்டு சிகிச்சைப் பிரிவுக்கு சென்று கொண்டிருந்தார்... அங்கே சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய இளைஞனின் தந்தை மருத்துவரின் வரவுக்காக காத்துக்கொண்டிருந்தார்.

மருத்துவரைக் கண்டதும் கோபமாக,
"என் மகன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான்...
ஏன் நீங்கள் இங்கு வர இவ்வளவு தாமதம்?
உங்களுக்கு பொறுப்புணர்ச்சி இருக்கிறதா?" என்று கதறினார்.

மருத்துவர் புன்னகையுடன், "மன்னியுங்கள், நான் மருத்துவமனையில் இல்லை... எனக்கு அழைப்பு
வந்ததும் என்னால் இயன்ற அளவு விரைந்து வந்தேன்... சற்று பொறுமையாக இருங்கள்" என்று கூறினார்.

"பொறுமையாக இருக்கவா?" அந்த தந்தை மேலும்
ஆத்திரத்துடன், "உங்கள் மகன் இவ்வாறு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தால் நீங்களும் பொறுமையாக இருப்பீர்களா? உங்கள் மகன் இறக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள்" என்று கொந்தளித்தார்.

மருத்துவர் சிரித்த முகத்துடன், "எங்களால் இயன்ற அளவு முயற்சி செய்கிறோம். நீங்களும் கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள்" என்றார்.

"கையறுநிலையில் இருப்பவனுக்கு அறிவுரை கூறுவது மிகவும் எளிது" தந்தை முனுமுனுத்தார். அறுவைசிகிச்சை சில மணி நேரங்கள் நடைபெற்றது...
மருத்துவர் மகிழ்ச்சியுடன் வெளியே வந்தார், "உங்கள் மகன் பிழைத்துவிட்டார்" என்று சொன்னபடி,
"மேற்கொண்டு ஏதும் சந்தேகம் என்றால் செவிலியரைக் கேட்டு அறிந்துகொள்ளுங்கள்" என்று கூறியபடி அவசரமாக போய்விட்டார்.

சற்று நேரத்தில் வந்த செவிலியரிடம், "அந்த மருத்துவர் அத்தனை அகங்காரம் பிடித்தவரா? என் மகனின் நிலையை என்னவென்று கூறக்கூட நேரமில்லையா?"
என்று நொந்துகொண்டார் தந்தை.

அதற்கு அந்த செவிலி கண்ணீர் மல்க, "அந்த மருத்துவரின் மகன் நேற்று ஒரு விபத்தில் இறந்துவிட்டார்... இன்று, அவர் மகனை அடக்கம் செய்யும் சடங்கில் இருந்தார். உங்கள் மகனுக்காக
அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்று அழைத்தவுடன் அந்த வேலையை ஒத்தி வைத்துவிட்டு ஓடி வந்து உங்கள் மகனையும் காப்பாற்றிவிட்டார்...
இப்போது மீண்டும் மகனை அடக்கம் செய்யப் புறப்படுகிறார்" என்று கூறினாள்.

நீதி: எவரின் மனநிலையையும் நாமே தீர்மானிக்கக் கூடாது, அவர்கள் வாழ்க்கையைப் பற்றியும், மனோநிலையைப் பற்றியும் நாம் அறிந்திருக்காதவரை!!

"நம் வாழ்க்கையில் பாதி பிரச்சனைகள் கற்பனையானவை... மீதி பிரச்சினைகள் தற்காலிகமானவை..." ‪‬

இன்பங்கள், துன்பங்கள் எதுவுமே நிரந்தரமில்லை.

பதில் இல்லையா???

சர்வதேச அறிவியல் மாநாட்டில் ஐந்து நாடுகளை சேர்ந்த மாணவர்களிடத்தில் கேட்கப்பட்ட கேள்வி ..

வெப்பமாக்கப் படும்போது
திரவ நிலையில் இருந்து திட நிலைக்கு மாறும் பொருள் எது ..?

சீனா :
வாய்ப்பே இல்லை அது போன்ற கேள்விக்கு
எந்த புத்தகத்திலும் பதில் இல்லை.

லண்டன் :
எந்த இணைய தளத்திலும் பதில் இல்லை.

பிரான்ஸ் :
அர்த்தமற்ற கேள்வி.

அமெரிக்கா :
பதில் தெரியாது.



இந்தியா :
லூசு பசங்களா இதுக்கூடவா தெரியாது ?

 "இட்லி"  டா !!